ருத்ரன் படத்தை வெளியிடத்தடையில்லை; சென்னை உயர்நீதிமன்றம்.!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவனி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள, ருத்ரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை கோரப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. வடஇந்திய மொழிகளின் டப்பிங் உரிமைக்காக எழுந்த பிரச்சனையால், ரெவன்ஸா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்தை வெளியிட 24 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக ருத்ரன் திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 இல் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் குழு, தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரியிருந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை ஏப்ரல் 14இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.