'பாதுகாப்பான தடுப்பூசி' – கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் இந்திய நடிகை!

Actress Shilpa Shirotkar has posted on her Instagram page that she is currently vaccinated and thanks the Dubai government for doing so.

பிரபல இந்தி முன்னணி நடிகையான ஷில்பா ஷிரோட்கர், தற்போது தடுப்பூசி போட்டிருப்பதாகவும், அதற்காக துபாய் அரசிற்கு நன்றி தெரிவித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி வருகிற  நிலையில்,இந்த  கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நிலையில் பல நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல இந்தி முன்னணி நடிகையான ஷில்பா ஷிரோட்கர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினி மற்றும் அமிதாப்பச்சன் நடித்த ‘ஹம்’ என்ற படத்தில்  நடித்துள்ளார். தற்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிற நிலையில், அங்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இவர் தற்போது தடுப்பூசி போட்டிருப்பதாகவும், அதற்காக துபாய் அரசிற்கு நன்றி தெரிவித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவியில், ‘பாதுகாப்பான தடுப்பூசி! நியூ நார்மல் 2021-க்கு வருகிறேன். நன்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node