மாமனிதன் திரைப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் நடிகை, கத்யத்திரி நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
unknown nodeயுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. எப்போது தான் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.
unknown nodeஇந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
unknown nodeஇந்த நிலையில், மாமனிதன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவலை இயக்குனர் சீனுராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் “மாமனிதன் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி “மேட்டர் ஹெவியா இருக்கே”என்றார். பிரபுதேவா கண்கலங்கினார் ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை. மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிக அருகில் நல்ல சேதி..
#மாமனிதன் படத்தின்
கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி “மேட்டர் ஹெவியா இருக்கே”என்றார்.
பிரபுதேவா கண்கலங்கினார் ஹிந்தி படத்தால் அவர்
வர இயலவில்லை.
மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை.
முடிவில் வந்தது
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி
மிக அருகில் நல்ல சேதி.. pic.twitter.com/F7BS587fr3— R.Seenu Ramasamy (@seenuramasamy) September 22, 2021