கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நாயகியாக நடிப்பேன்! சர்ச்சை நடிகை அதிரடி!

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நாயகியாக நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.