இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன் ” . இப்படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeமெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeபடத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். டீசர் வந்த காட்சிகள் அனைத்தும் அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்.
unknown nodeஇந்த நிலையில், பொன்னியின் செல்வன் – 1 படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்கு சியான் விக்ரம் டப்பிங் கொடுக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையலாம், கன்னடம் என 5 மொழிகளுக்கும் விக்ரமே டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.
Our Chola Tiger Roars – in 5 tongues!#PS1Teaser #PonniyinSelvanTeaser #PonniyinSelvan#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman #Vikram @Tipsofficial pic.twitter.com/0cIEQIIrUU
— Lyca Productions (@LycaProductions) July 13, 2022


