சோசியல் மீடியாவில் களமிறங்கிய சிம்பு .... கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் சிம்பு சமூகவலைத்தளங்களில் இன்று தனது ஆஃபீசியல் அக்கௌவுண்டை திறந்துள்ளார்.

நடிகர் சிம்பு சமூகவலைத்தளங்களில் இன்று தனது ஆஃபீசியல் அக்கௌவுண்டை திறந்துள்ளார்.

நடிகர் சிம்பு தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவருக்கு நடிப்பு மட்டுமல்லாமல் அதை தாண்டி பாடல் பாடுவது, இசை அமைப்பது என பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து இருந்தாலும், சினிமாவில் தொடர்ந்து ஜெயிக்க முடியாத நிலை ஏற்பட்டு அடிக்கடி சறுக்கல் ஏற்பட்டு விடுகிறது. அண்மையில் மிக உடம்பாக காணப்பட்ட இவர், தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்குப் பிடித்த அழகான தோற்றத்துடன் காட்சி அளித்தார்.

இந்நிலையில், சிம்பு சமூக வலைதளங்கள் ஒன்றிலும் இதுவரை கிடையாது என்று அறிந்ததே. தான் சமூகவலைதளத்தில் வர இருப்பதாக ஏற்கனவே அவர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் தனது அக்கவுண்ட்களை ஓபன் செய்துள்ளார். ட்விட்டரில் அவர் ஓபன் செய்ததும் போட்ட முதல் பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த பதிவு,

unknown node