“மாநாடு” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என நடிகர் சிம்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு “மாநாடு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால், “மாநாடு” திரைப்படம் எப்போது வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், “மாநாடு” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என நடிகர் சிம்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு தீபாவளிக்கு வெளியாகிறது. அஜித்தின் “வலிமை” தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த தீபாவளிக்கு 3 பெரிய படங்கள் மோத உள்ளன.
unknown node