மாமாவிற்கு பரிசளித்த சிம்புவின் தங்கை மகன்.!மாமா-மாப்பிள்ளையின் கியூட் வீடியோ.!

The cute video of actor Simbu being gifted by his sister Ilakia's son Jason has gone viral on social media.

நடிகர் சிம்புவிற்கு அவரது தங்கை இலக்கியாவின் மகனான ஜேசன் பரிசு வழங்கும் கியூட்டான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின்னர் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் மஃப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

சிம்பு தற்போது படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தாலும் குடும்பத்தினருடன் ஜாலியாக இருந்து வருகிறார்.அதுவும் அவரது சகோதரி மகனுடன் லூட்டி அடிப்பது வழக்கமான ஒன்று தான் . அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் வருவது வழக்கம்.அந்த வகையில் தற்போது தனது தங்கை இலக்கியாவின் மகனான ஜேசன் சிம்புவிற்கு பரிசு கொடுக்கும் கியூட்டான வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் சிம்புவிற்கு ஜேசன் பிறந்தநாள் பரிசு கொடுக்க சிம்பு ஜேசனை கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார்.இந்த அழகான வீடியோவை சிம்பு ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருவதுடன் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியும் வருகிறது.

unknown node