சிறகடிக்க ஆசை சீரியல்- முத்துவின் காலில் விழுந்த சத்யா..!
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 10] எபிசோடில் மீனா முத்துவை வெளியில் எடுக்க சுருதி இடம் உதவி கேட்கிறார்..
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 10] எபிசோடில் மீனா முத்துவை வெளியில் எடுக்க சுருதி இடம் உதவி கேட்கிறார்..
மீனா அண்ணாமலையிடம் திட்டு வாங்கினார் ;
மீனா சுருதிக்கு கால் பண்ணி போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற விஷயத்தை சொல்றாங்க.. உடனே சுருதி அவங்க அம்மாவுக்கு கால் பண்ணி ஹெல்ப் கேக்குறாங்க.. முத்துக்குன்னு தெரிஞ்சதும் ஸ்ருதியோட அப்பா அதெல்லாம் என்னால பண்ண முடியாதுன்னு சொல்லிடுறாரு ..இப்ப வருத்தத்தோட ஸ்ருதி மீனா கிட்ட சொல்றாங்க ..பரவாயில்லைன்னு மீனாவும் சொல்லிடறாங்க.. மீனா முத்து கிட்ட சொல்றாங்க நிறைய பேரு கிட்ட ஹெல்ப் கேட்டேன் யாருமே உதவி பண்ணல.. சரி விடு மீனா நீங்க ரெண்டு பேருமே வீட்டுக்கு போங்க இன்னைக்கு ஒரு நைட் தானே நான் காலையில வெளில வந்துருவேன் அப்படின்னு சொல்றாங்க.. ஆனா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் அப்படின்னு சொல்றாரு மீனாவும் சரின்னு சொல்லிட்டு கிளம்புறாங்க ..
ஆனா ஆல்ரெடி ஸ்ருதியோட அம்மா விஜயா கிட்ட முத்து ஸ்டேஷனில் இருக்கிற விஷயத்தை பத்த வச்சுருக்காங்க .. இப்போ மீனா வீட்டுக்குள்ள வராங்க ..விஜயா ஏய் நில்லுடி மணி எத்தனை 10 மணிக்கு எங்க போயிட்டு வர.. கல்யாணம் ஆடர்க்கு பூ காட்ட கூப்பிட்டாங்க அதான் லேட் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க.. அப்போ உன் புருஷன் எங்க அப்படின்னு கேட்க அவர் சவாரி போயிருக்காரு அப்படின்னு மீனா சொல்ல உடனே விஜயா எங்கே போலீஸ் ஸ்டேஷன்க்கா.. அப்படின்னு கேக்குறாங்க. மீனா ஷாக்கா பாக்குறாங்க.. இப்ப அண்ணாமலையும் வர்ராரு .. என்ன மீனா எங்க அவன் .. அது வந்து.. மாமான்னு தயங்குறாங்க .. இப்போ நடந்த எல்லாத்தையும் சொல்றாங்க ..என் என் தம்பிக்கு ஒரு நல்லது பண்ண போனாரு ஆனா இந்த மாதிரி நடந்துருச்சு நாங்க எதிர்பார்க்கல மாமா அப்படின்னு சொல்லுறாங்க .. சரி நீ எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லுவ இல்ல இத மட்டும் ஏன் என்கிட்ட ஏன் சொல்லல..
முத்துவிடம் சத்யா மன்னிப்பு கேட்கிறார் ;
அவன் தான் அப்படி சொல்றானா நீயும் ஏம்மா இப்படி பண்ணுன நீ அவனுக்கு எடுத்து சொல்றதில்லையா அப்படின்னு கோவமா பேசுறாரு.. இத பாத்தா விஜயா மனோஜ் கிட்டே இது உங்க அப்பாவா சும்மா மருமகளை தலைமையில் தூக்கி வச்சு பேசுவாரு இன்னைக்கு என்ன இப்படி பேசுறாருன்னு சந்தோசப்படுறாங்க.. இப்ப காலையில மீனா, சத்தியா, சீதா மூணு பேருமே ஸ்டேஷனுக்கு போறாங்க அங்க போலீசை பார்த்துட்டு பேசிட்டு முத்துவ வெளில கூட்டிட்டு வந்துடறாங்க.. இப்ப முத்து கால்ல சத்யா போய் விழுந்து என்னை மன்னிச்சிடுங்க மாமா நான் உங்களை எத்தனையோ தடவை மரியாதை இல்லாம பேசி இருக்கிறேன்.. விடு சத்யா இதுக்காக நீ காலுல விழுவியா .. நீ நல்லா படிச்சு நல்லா வேலைக்கு போகணும் அப்படின்னு சொல்றாரு .சரி மாமா நான் கண்டிப்பா செய்றேன் அப்படின்னு சத்யா சொல்லுறாரு இதோட இன்னைக்கு எபிசோடை முடிச்சுருக்காங்க ..