அனிருத் சார் ஹீரோவானால் படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சங்கர் இயக்கும் கமலின் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுதான் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள அனிருத்தின் முதல் படமாம்.அதனையடுத்து விக்ரம் 60ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார்.
இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு அவரது நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் சுவாரஸ்யமான கமெண்ட் ஒன்றை செய்துள்ளார். அதில் ‘சார் எப்போது ஆனாலும் சரி, என்னைக்கு ஆனாலும் சரி, நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்திற்கு தயாரிப்பாளர் நான் தான் என்றும், நன்றி சார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனும், அவர் ஹீரோவாக நடிக்கும் இயக்குவது நான் தான் என்று தெரிவித்துள்ளார். இது உண்மையாகுமா இல்லையா என்று வருங்காலங்களில் பார்க்கலாம்.
unknown node