Categories: சினிமா

HBD Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தென்னிந்திய பிரபலங்கள் வாழ்த்து.!

Published by
கெளதம்

பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த், நடிகராக வேண்டும் என்ற சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, 1975-ல் ‘அபூர்வ ராகங்களில்’ தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம், நிக்காமல் 70 வயதை கடந்தும் ரயில் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார். இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73-வது பிறந்தநாள்.

இந்த நிலையில், அவரது 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ் சினிமாவில், கமல்ஹாசன், தனுஷ், குஷ்பூ, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து உள்ளனர்.

அந்த வரிசையில், மலையாள நடிகர் மம்முட்டி தனது X தள பக்கத்தில், “இனிவரும் ஆண்டு வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள். எப்போதும் போல் ஆரோக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் இருங்கள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது X தள பக்கத்தில், “ஒரே ஒரு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வளர்ச்சிபல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மலையாள நடிகர் மோகன் லால் தனது X தள பக்கத்தில், “என் அன்பான ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கும் கருணை மற்றும் பணிவின் உண்மையான உருவகமாக, இன்னும் பல ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டுகள் வரவுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பிரமுகர்கள்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்,  “மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களை தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல், “தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என X தளத்தில் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

12 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

13 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

14 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

14 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

15 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

16 hours ago