நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்.
unknown nodeசமூக அக்கறையுடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த காத்திருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு நேரில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
unknown nodeஅதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ” சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள எங்கள் திரைப்படத்தை நேற்று பார்த்து, படக்குழுவினரை பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
திரு.@BoneyKapoor அவர்களுடன் @mynameisraahul இணைந்து தயாரித்து, @Arunrajakamaraj இயக்கத்தில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள எங்கள் #NenjukuNeedhi திரைப்படத்தை நேற்று பார்த்து, படக்குழுவினரை பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு எங்கள் நன்றி. @RedGiantMovies_ pic.twitter.com/DSW7OBJswy
— Udhay (@Udhaystalin) May 16, 2022