Vijay : சூப்பர் ஸ்டார் பட்டமா இளைய தளபதி பட்டமா? விஜய் சொன்ன நச் பதில்!

vijay speech

நடிகர் ரஜினிகாந்திற்கு மக்கள் கொடுத்த பட்டம் சூப்பர் ஸ்டார். இந்த பட்டத்தை மக்கள் கொடுத்த பிறகு ரஜினி நடிக்கும் படங்கள் அனைத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் என்று தான் டைட்டில் கார்ட் வரும். இருப்பினும், அவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிகர் விஜய் நடிக்கும் படங்களும் வசூலை பெரிய அளவில் குவித்து வருவதால் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என பல தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

அதைப்போல, விஜய் ரசிகர்கள் கூட சிலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என கூறிவந்தனர். தற்போது சமீபகாலமாக பெரிய சண்டையே போய்க்கொண்டு இருந்தது அது என்னவென்றால், விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என சிலர் கூற இதனால் நடிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி என்று ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என கூறிவருகிறார்கள்.

இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கும் நிலையில், நடிகர் விஜயின் பழைய டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 2014-ஆம் ஆண்டு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா இளைய தளபதி பட்டம் பிடிக்குமா? என கேள்வி எழுப்பினார்.

VIJAY ABOUT super star titile
VIJAY ABOUT super star titile [File Image]

அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஜய் ” உங்களோட இந்த அன்புக்கு முன்னால் எந்த டைட்டிலும் பெருசா தோணலை. என்றும் உங்கள் விஜய்” என கூறினார். அந்த சமயமே விஜய் இப்படி பதில் கூறியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த பழைய பதிவு தான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், நடிக்க வந்த ஆரம்பகாலகட்டத்தில் தன்னுடைய படங்களின் டைட்டில் கார்டில் இளைய தளபதி என வைத்திருந்த விஜய் சிவகாசி படத்திற்கு பிறகு தன்னுடைய பெயரை தளபதி விஜய் என மாற்றிவிட்டார். அதிலிருந்து அவர் நடிக்கும் படங்களின் டைட்டில் கார்டில் தளபதி விஜய் தான் என்று பெயர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்