Jason Sanjay : லைக்கா நிறுவனத்தால் செம கடுப்பான விஜய் மகன்! நடந்தது என்ன தெரியுமா?

vijay son lyca

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இவர் இயக்கும் முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த  நாட்களுக்கு முன்பு வெளியானது. இருப்பினும் படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறார் ஹீரோயினாக யார் நடிக்கவுள்ளார்  படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால், உண்மையாகவே ஒரு தகவல் பரவி வந்தது என்னவென்றால் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மகன் ஏ.ஆர். அமீன் ஜேசன் சஞ்சய்க்கு  நல்ல நெருங்கிய நண்பர் எனவே அவருடைய வயதிற்கும் இவருடைய வயதிற்கும் சரியாக செட் ஆகும் என்ற காரணத்தினால் தான் இயக்கும்  முதல் படத்திற்கு அவரை இசையமைக்க  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது லைக்கா நிறுவனம் படத்திற்கு நீங்கள் யார் வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள் ஆனால் இசையமைப்பாளராக அனிருத்தை போடுவோம் என கூறியிருக்கிறதாம். ஆனால், விஜயன் மகன் மனதில் ஏ.ஆர். அமீன் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறதாம். இருப்பினும் லைக்கா நிறுவனம் இப்போது உச்சத்தில் அனிருத் தான் இருக்கிறார்.

எனவே, அவர் நம்மளுடைய  படத்திற்கு இசையமைத்து கொடுத்தால் அந்த பாடலை நமக்கு புரமோஷன் ஆக இருக்கும் என கூறியுள்ளதாம். இதான் காரணமாக ஜேசன் சஞ்சய் சற்று குழப்பத்தில் இருக்கிறாராம். ஆனால் என்னதான் சொன்னாலும் அவருடைய மனதில் தன்னுடைய முதல் படத்திற்கு ஏ.ஆர். அமீன் தான் இசையமைக்க வேண்டும் என இருக்கிறது. எனவே லைக்கா நிறுவனம் விஜயின் மகன் ஆசையை நிறைவேற்றுமா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க நடிகர்கள் அதர்வா, கவின், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்