தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை குற்றம் சொல்ல முடியாது!!! படத்தை இவர்களுக்கு விற்று விடுங்கள் !!பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் !!

இந்திய  திரையுலகிற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் நீண்டநாளாக பல வேண்டாத வேலைகளை செய்து பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த இணையதளம் எந்த நடிகரின்

இந்திய  திரையுலகிற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் நீண்டநாளாக பல வேண்டாத வேலைகளை செய்து பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த இணையதளம் எந்த நடிகரின் படம் திரைக்கு வந்தாலும் அந்த நடிகரின் படத்தை வந்த முதல்நாளே இணையத்தளத்தில் வெளியிருக்கிறது. எனவே  நடிகர் எஸ்.வி.சேகர் இந்த இணையதளத்தை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

எனவே இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர்  கூறுகையில் ,தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை குற்றம் கூற கூடாது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியின் எதிரொலியாக தான் இந்த இணையதளம் உள்ளது என்று கூறியுள்ளார். இனிமேல்  திரைப்படம் தயாரிப்பவர்கள் ‘ தமிழ் ராக்கர்ஸ் ‘ இணையதளத்திடம் படத்தை விற்று  விடுங்கள் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த சர்ச்சையான பேச்சு திரையுலகில் உள்ள  பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.