அவர் வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் வாணி போஜன் தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்கள்,நடிகைகள் அதிகமாக சின்னத்திரையில் நடித்தவர்கள் தான்.சின்னத்திரையில் அவர்களின் நடிப்பு திறமையை பார்த்து வெள்ளித்திரையில் வாய்ப்பு தருகிறார்கள்.
இந்நிலையில் “தெய்வ மகள்” சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று பிரபலமானவர் வாணி போஜன். தற்போது தெய்வ மகள் சீரியல் நிறைவடைந்த நிலையில் வாணி போஜன் வேற சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் வாணி போஜன் தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இப்படத்தை நடிகர் நிதின் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.தற்போது இப்படத்தில் நடிகை பூர்ணா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
“கல்யாணம் முதல் காதல் வரை ” என்ற சீரியலில் இருந்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக வைபவ்விற்கு ஜோடியாக நடித்தவர் பிரியா பவானி என்பது குறிப்பித்தக்கது.
unknown node