தல சொன்ன மாதிரியே என் தலையெழுத்து மாறிட்டு....!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அஜித் அவர்கள் தனக்கென்று தனி கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அஜித் அவர்கள் கூறிய வார்த்தையை மனம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அஜித் அவர்கள் தனக்கென்று தனி கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அஜித் அவர்கள் கூறிய வார்த்தையை மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் விஷ்ணு.இதனையடுத்து, இந்த வாரம் நடிகர் விஷ்ணு நடித்த ராட்சஸன் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டியில்,” 5 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் அஜித்தின் அருகில் அமர்ந்து வந்ததாக கூறியுள்ளார், அஜித் அவர்கள் அவரிடம் கூறுகையில் இன்னும் சில வருடங்களில்உன் வாழ்க்கையே மாறிவிடும், நீ பெரிய இடத்திற்கு வருவாய் ” என்று கூறிய வார்த்தை நிறைவேறி உள்ளதாக கூறியுள்ளார்.அவர் சொன்னது போலவே தன் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடப்பதாக கூறியுள்ளார்.