உலகநாயகன் மண்ணில் உதித்த நாள்!

உலகநாயகன் கமலஹாசனின் 66-வது பிறந்தநாள்.

உலகநாயகன் கமலஹாசனின் 66-வது பிறந்தநாள்.

திரையுலகில் உலக நாயகனாகவும், அரசியல் வாட்டாரத்தில் மக்களின் தலைவனாகவும் வலம் வருபவர் கமலஹாசன். இவர் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது இந்த பதிவில், இவரது வாழ்க்கை பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.

உலகநாயகன் கமலஹாசன், 1954-ம் ஆண்டு, நவ.7ம் நாள் சீனிவாசன்-ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு சகோதரர்களும், நளினி என்ற ஒரு சகோதரியும் உள்ளனர்.

திரையுலகில் கமல்

இன்று திரையுலகின் நாயகனாக வலம் வரும் கமலஹாசன், திரையுலகில் மிக சிறிய வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

unknown node

கமலஹாசன் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் விருது, என்.டி.ஆர்.தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் தமிழ் மக்களால் விரும்பி பார்க்கப்படும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின், மூன்று சீசன்களை தொகுத்து வழங்கினார். தற்போது நான்காவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இவரது நடிப்பு திறமையால் சினிமா வட்டாரத்தில், பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

அரசியலில் கமல்

unknown node

அரசியலில் நுழைந்த கமலஹாசன், 2018-ம் ஆண்டு, பிப்.21ம் தேதி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தனது கட்சி பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என அறிவித்தார். அதே கூட்டத்திலேயே கட்சிக்கான கொடியையும் வெளியிட்டு, அந்த கொடியை ஏற்றியும் வைத்தார். தொடர்ந்து அரசியலில் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாதாக நடைபெற்ற கட்சி கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடும் கமலஹாசனுக்கு, சினிமா வட்டாரத்திலும், அரசியல்