திரையரங்கு உரிமையாளர்கள் சங்க முடிவு அபாயகரமானது – இயக்குனர் பாரதி ராஜா

திரையரங்கு உரிமையாளர் சங்கம், தியேட்டர் வசூல்  பிரிப்பதில், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து

திரையரங்கு உரிமையாளர் சங்கம், தியேட்டர் வசூல்  பிரிப்பதில், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து இயக்குனர் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் முடிவு அபாயகரமானது என்றும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசால், நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இவைகளை மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.