சிறகடிக்க ஆசை இன்று.. விஜயாவின் லட்சியம் நிறைவேறுமா ?

sirakadikka asai

Sirakadikka asai– சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய[june 17] கதைகளம் எப்படி இருக்கும் என இப்பதிவில் காணலாம்.

வீட்டில் எல்லோருமே விஜயாவின் ரூமை  பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .அப்போ சுருதி மீனாவிடம் அத்தை என்ன பண்றாங்க மீனா நீங்களாவது சொல்லுங்க அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு மீனா சொல்றாங்க அத நான் சொல்றதை விட நீங்க பார்த்தா உங்களுக்கு நல்லா புரியும்.

இப்போ சலங்கை சத்தம் கேட்குது இத கேட்டா முத்து சலங்கை சத்தம் எல்லாம் கேக்குது அப்ப பேய் இருக்கு போல அப்படின்னு அண்ணாமலை கிட்ட கேக்குறாங்க .இப்போ ரோகிணி விஜயாவுக்கு பரதநாட்டிய மேக்கப் போட்டு கதவ திறக்கிறாங்க . எல்லாரும் ஆச்சரியமா விஜயாவ பாக்குறாங்க.

இந்த ஆச்சரியத்தில் முத்துக்கு விக்கலே வந்திருச்சு. ரவி சொல்றாங்க என்னம்மா அரங்கேற்றம் எதுவும் பண்ணப் போறீங்களா அப்படின்னு கேக்குறாங்க. ஸ்ருதி விஜயாவை போய் கட்டிப்பிடித்து ஆன்ட்டி இந்த மேக்கப்ல நீங்க ரொம்ப அழகா  இருக்கிறீங்க அப்படின்னு சொல்றாங்க.

இப்போ அண்ணாமலைக்கும் விக்கல் வந்தது. ரோகிணி சொல்றாங்க ஆன்ட்டி ஒரு பரதநாட்டிய டான்சர் . விஜயாவும் எல்லாருமே கேக்குற கேள்விக்கு டான்ஸ் ஆடிட்டு பதில் சொல்றாங்க. எனக்கு ரோகிணி தான் இந்த ஐடியாவை கொடுத்தா. நான் சீக்கிரமா டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்க போறேன் அப்படிங்கிறாங்க.

அதுக்கு மீனாவும் பார்வதி ஆன்ட்டி வீட்ல தான் கிளாஸ் ஆரம்பிக்க போறாங்கன்னு சொல்றாங்க. இத கேட்டு எல்லாருக்குமே ஒரே ஷாக்கா இருக்கு. சொன்ன மாதிரி விஜயா டான்ஸ் கிளாஸும் ஆரம்பிச்சிடுறாங்க. ரவி சொல்கிறார் என்னமா ஏதோ பேச்சுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன் உண்மையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களே அப்படின்னு சொல்றாரு.

இந்த டான்ஸ் கிளாஸ்ச திறப்பதற்கு ஸ்ருதியோட அம்மா தான் ஜீப் கெஸ்டா   வராங்க .அவங்கள ஆரத்தி காட்டி உள்ள வரவேற்கிறாங்க விஜயா. ஸ்ருதியோட அம்மா சொல்றாங்க இதெல்லாம் எதுக்குங்க அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு விஜயா சொல்றாங்க என்னோட கலைப்பயணத்தை ஆரம்பிச்சு வைக்க போறீங்க அதுக்காகத்தானு  சொல்றாங்க.

இப்போ விளக்கேத்தி ஆரம்பிச்சு வைக்கிறாங்க .அதற்கடுத்து சுருதி ,ரோகிணின்னு எல்லாரையுமே கூப்பிட்டு விளக்கேத்த சொல்றாங்க, ஆனா மீனாவை மட்டும் கூப்பிடல. இதுக்கு முத்துவும்  அண்ணாமலையும் சொல்றாங்க எல்லாரையுமே கூப்பிடுற மீனாவை மட்டும் ஏன் கூப்பிடலைன்னு கேக்குறாங்க.

அதுக்கு மீனா சொல்றாங்க நான் தானே முதல்ல எண்ணெய்  உத்தி விளக்கு திரி போட்டேன் அப்ப நான் தானே முதல்ல தொடங்கி வைத்தேன் அப்படின்னு சமாதானப்படுத்திக்கிறாங்க. இதோட இன்னைக்கான எபிசோட் முடிந்தது.

நாளைக்கு ப்ரோமோல EP ல இருந்து பார்வதி வீட்டுக்கு வராங்க. டான்ஸ் கிளாஸ் ஆரம்பிச்சா மூணு மடங்கு கரண்ட் பில் கட்டணும் அப்படின்னு சொல்றாங்க. இதை கேட்டு பார்வதியும் விஜயாவும் ஷாக்கா நிக்கிறாங்க. நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு நாளைய எபிசோடில் பார்ப்போம் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai