பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
unknown nodeஇரண்டாவது சீசன் அளவிற்கு மூன்றாவது சீசன் இல்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அது ஒரு புறம் இருக்க புகழ் இருக்கார் என அவருக்காக பலர் ரசிகர்கள் மூன்றாவது சீசனை பார்த்தனர். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, புகழும் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு சென்றதால் அவராலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.
unknown nodeஇதனையடுத்து மீண்டும் எப்போது தான் புகழ் வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், குக் வித் கோமாளில் நிகழ்ச்சிக்கு நீண்ட வாரங்களுக்கு பிறகு புகழ் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார்.
unknown nodeஅதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. ப்ரோமோவில் புகழ் சூதுகவ்வும் படத்தின் விஜய் சேதுபதி கெட்டப்பில் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ இந்த வாரம் நிகழ்ச்சி வேற லெவலை இருக்கும் என கூறிவருகிறார்கள்.
புகழ் வந்தாலே வேற லெவல் Atrocity தான்.. ???????? #CookWithComali Season 3 – Saturday @ 9:30 pm | Sunday @ 9 pm #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/q4JxKJm8cA
— Vijay Television (@vijaytelevision) May 5, 2022