ஒரு அடார் லவ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றிய படக்குழு....!!!

This cinema news gives information about the film crew of an adorable love film changed the glimax - oru adar love climax katchiyai marriya padakulu

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான ஒரு அடார் லவ்

ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலில் சிக்கிய ரசிகர்கள்

எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது

கிளைமாக்ஸ் காட்சியை மாற்றிய படக்குழுவினர்

பிப்.20ம் தேதியில் புதிய வடிவத்தில் உருவெடுக்கும் ஒரு அடார் லவ்

இயக்குனர் ஓமர் லுலு இயக்கத்தில், மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் காதலர் தினத்தன்று வெளியானது.

இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இந்நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

unknown node

ஆனால், படக்குழுவினரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அதிகமான எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கடுமையாக விமர்சித்தார்கள்.

எனவே, படக்குழுவினர் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி உள்ளார்கள். இப்படத்தை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பலர் ட்வீட் செய்திருந்தனர்.

ஒரு அடார் லவ் புதிய வடிவத்தில் பிப்.20ம் தேதி பகல் காட்சியாக ரிலீஸ் ஆகும் என்று இயக்குனர் ஓமர் லுலு தெரிவித்துள்ளார்.