கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு தனிமைப்படுத்தப்பட்ட நாட்களாகவே இருந்தன – காதலர் தின பட நடிகை

கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு தனிமைப்படுத்தப்பட்ட நாட்களாகவே இருந்தன என சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.
உலகம் முழுவதுமே கொரோனா அச்சத்தில் மூழ்கி போய் உள்ளது. முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்க துவங்கியது. இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள், மிக தீவிரமாக களமிறங்கியிருந்தாலும், இதுவரை இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், காதலர் தின பட நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பின் தீவிர சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டுள்ளார். இதனையடுத்து இவர் தான் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்ட நாட்களை கொரோனா வைரஸ் தொடர்பான, ஊரடங்கு நாட்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலங்களாகவே இருந்தன. ஆனால், நிறைய பேர் நலம் விசாரிக்க வருவார்கள், போவார்கள்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025