கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாடோடிகள் இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சசிகுமார், அனன்யா, விஜய் வசந்த், பரணி, அபிநயா முதலியவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
தற்போது சமுத்திரக்கனி ‘ நாடோடிகள் 2 ‘ திரைப்படத்தை இயக்குகிறார்.இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் சசிகுமார் – அஞ்சலி நாயகன் முதலியவர்கள் நடிக்கிறார்கள். எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி உள்ளிடோர் நடித்துள்ளனர்.
மேலும் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி ‘ நாடோடிகள் 2 ‘ படத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்தது. விரைவில் நாடோடிகள் 2 திரைக்கு வரும் என இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.