வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் ரிலீசாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

GoodBadUgly

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்காக, பிற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கப்பட்டன. அஜித் குமாரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இப்படத்தை கொண்டாடுவதற்காக திரையரங்குகளுக்கு திரளாக வந்துள்ளனர்.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் பட்டாசு வெடித்து, நடனமாடி, பேனர்கள் மற்றும் கட்அவுட்கள் மூலம் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அஜித்துக்கு ‘விடாமுயற்சி’ படத் தோல்விக்குப் பின் இப்படம் வெளியாவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயரே ‘ரெட் டிராகன்’ என்று இருப்பதால், மாஸ் சீன்கள் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்