மன்சூர் அலிகானின் ‘ரேப்’ சர்ச்சை கருத்து… கடுப்பான த்ரிஷா.. கண்டித்த லோகேஷ்.!

தமிழ் திரையுலகளில் 80களில் கொடூர வில்லனாக ரசிகர்களை மிரள வைத்த மன்சூர் அலிகான் தற்போது, காமெடி வில்லன் வேடத்தில் ரசிகர்ளை சிரிக்க வைத்து வருகிறார். இவர் தற்போது தனக்கு தோன்றியதை அப்படியே ஒரு பேட்டியில் பேசி சிக்கலில் மாட்டியுள்ளார்.
அந்த பேட்டியால், அவரை மிகவும் பிடித்தவர் என பேட்டிகளில் கொண்டாடி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட கணடனம் தெரிவிக்கும் வகையில் அமைந்துவிட்டது. அந்த பேட்டியில், முன்னர் உள்ள படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் அமைக்கப்படும். லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை என பேசியிருந்தார்.
இவரது இந்த பேச்சுக்கு தற்போது தமிழ் திரைத்துறையில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நடிகை திரிஷா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ‘ சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய வீடியோ ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேலும் இது அவரது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனையை காட்டுகிறது. அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் நடித்ததில்லை என்பதற்கு திரைத்துறையினருக்கு நன்றி கூறுகிறேன். மேலும் எனது திரையுலக வாழ்க்கையில் இனிமேலும், அவருடன் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் எனது தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் சமூக வேலைதா பக்கத்தில் பதிவிடுகையில் , ” நாங்கள் அனைவரும் ஒரே திரைப்படத்தில் பணியாற்றியதால், மன்சூர் அலிகான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தேன். பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை எந்தத் துறையிலும் குறைவில்லாமல் ஒன்றாக இருக்க வேண்டும். மன்சூர் அலிகான் கருத்தை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
பயனர்களுக்கு தூண்டில் போட்ட அம்பானி! ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025