விஷால் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு

The Tamil Nadu government should respond to Vishal's case

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  விஷால் உள்ளார். இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இவர் மீது ஒரு தரப்பினர் பல குற்றங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பதவியில் உள்ள அனைவரும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும்  ஒரு சிறப்பு அதிகாரியை அரசு  நியமித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரி மூலம்  தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை பார்த்து அறிவித்துள்ளனர்.

தற்போது  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. விசாரணையில்   மே- 7ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .