வெற்றி நடை போடும் 'விடுதலை'..! தினேஷ் கார்த்திக் புகழாரம்..!

சூரியின் நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்பபடத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.

சூரியின் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ திரைப்பபடத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.

நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கெளதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அந்தவகையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ‘விடுதலை’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். படம் குறித்து பேசிய அவர், “நான் பொல்லாதவன் படத்திலிருந்தே வெற்றிமாறன் ரசிகன். அவர் இயக்கத்தில் வெளியான விடுதலை அருமையாகவும் அட்டகாசமாகவும் உள்ளது” என்று கூறினார்.

unknown node

இதைத்தொடர்ந்து, இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் என அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். படம் ஏற்கனவே பெரிய வெற்றியடைந்துள்ளது. தொடர்ந்து பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்’ என கூறியுள்ளார். மேலும்,  படக்குழுவினர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node