மாவீரன் படத்தை வெளியிட தடையில்லை – ஐகோர்ட் உத்தரவு

மாவீரன் படத்தில் இந்திய ஜனநாயக கட்சி கொடி பிரதிபலிக்காத வகையில் வெளியிட வேண்டும் என உத்தரவு.

maveeran movie

மாவீரன் படத்தில் இந்திய ஜனநாயக கட்சி கொடி பிரதிபலிக்காத வகையில் வெளியிட வேண்டும் என உத்தரவு.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவீரன் படத்தில் இந்திய ஜனநாயக (ஐ.ஜே.கே) கட்சி கொடி பிரதிபலிக்காத வகையில் வெளியிட வேண்டும். அதாவது, மாவீரன் படத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாற்றம் செய்த பின்பே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி, சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும் என்றும் மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என 40 வினாடிக்கு பொறுப்புத் துறப்பு போட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி சங்கர் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில், ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.