திரையரங்குகளை விழி பிதுங்க வைத்த சர்க்கார்...!!!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு சரவெடியாக களமிறங்கவுள்ளது. இதனையடுத்து மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில், இப்படம் குறித்து

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது வரும் தீபாவளிக்கு சரவெடியாக களமிறங்கவுள்ளது. இதனையடுத்து மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில், இப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் நேற்று மாலை சர்க்கார் டீசர் வெளியானது. இதற்க்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பும், பாராட்டு மழைகளும் குவிந்து வருகிறது.வரும் தீபாவளிக்கு வெளியாகும் சர்க்கார் படத்திற்கு முதல் நாள் காட்சிகளுக்கு மக்கள் கூட்டம் அலை கடல் என திரண்டு வருவர்கள் என கூறப்படுகிறது. இதனையடுத்து ரோகிணி தியேட்டரில் 2200 டிக்கெட்டுகள் தான் வழங்குமளவுக்கு வசதி உள்ளதாம். ஆனால் 5200 டிக்கெட்டுகள் கேட்டுள்ளார்களாம். இதனால் திரையரங்குகளை விழிபிதுங்க செயதள்ளது சர்க்கார்  திரைப்படம். மற்ற தியேர்ட்டர்களின் நிலையும் இவ்வாறு தான் உள்ளதாம்.