நடிகை குஷ்புவின் மகளா இது! உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி!

Khushboo's daughter has posted a photo of herself slimming her body weight in half in retaliation to those who mocked.

தன்னை உருவ கேலி செய்து வந்தவர்களுக்கு செயலால் பதிலடி கொடுக்கும் விதமாக தனது உடல் எடையை பாதிக்கு பாதி குறைத்து ஸ்லிம்மாக உள்ள புகைப்படத்தை குஷ்புவின் மகள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகை குஷ்பு தற்போது ஒரு புறம் நடித்து வந்தாலும், மற்றொரு புறம் அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போலவே க்யூட்டாகவும் சற்று குண்டான தோற்றத்தில் இருப்பார்கள்.

unknown node

இவர்களின் உருவத்தை வைத்து பலரும் கேலி செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது குஷ்புவும் பதிலடி கொடுத்து வந்த நிலையில், தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்புவின் மகள் அனந்திதா தற்பொழுது தனது உடல் எடையில் பாதிக்கு பாதியாக குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதுடன், அவரா இது என பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.