”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்தின் டிரெய்லர் வெளியானது.

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதே ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் கலந்த டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.
இப்படத்தில், பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 1ம் தேதி அன்று வெளியாகத் தயாராகி வருகிறது. படம் விரைவில் பெரிய திரைகளில் வருவதற்கு முன்னதாக, இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
பிரேமம் திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தொகுத்துள்ள 2 நிமிடம் 42 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது, அதிக ஆக்ஷன் மற்றும் காதல் கதையால் நிரம்பியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவைத் தவிர, இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இதை 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றன. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025