அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் டிம் டேவிட் அரைசதம் விளாசி அசத்தினார்.

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணிக்காக அதிகபட்சமாக டிம் டேவிட் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஞ்சாப் பவுலர்களின் அதிரடியால் முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி, ஆர்சிபி அணி வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஜிதேஷ் சர்மா 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக குருணால் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். மேலும், கேப்டன் ரஜத் படிதர் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மனோஜால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆர்சிபி அணி சார்பாக, டிம் டேவிட் மட்டும் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார். அவர், 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸ் அடித்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பாக, அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 2 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில், பெங்களூரு 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 95 ரன்கள் மட்டுமே குவித்தது. இப்பொது, 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க போகிறது.