புத்தாண்டு தினத்தில் வெளியாகிறதா தளபதியின் இரு படங்களின் அப்டேட்.!

It has been reported that the trailer of Thalapathy Vijay's master film and the title of Thalapathy 65 will be released on New Year's Day.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிரைலரும் , தளபதி 65 படத்தின் டைட்டிலையும் புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.இவர் அடுத்ததாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள “தளபதி 65” படத்தில் நடிக்கவுள்ளார் .

அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.இந்த நிலையில் இவரது இரண்டு படத்தின் அப்டேட்களும் புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள மாஸ்டர் படத்தின் டிரைலரை புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளதாகவும் ,அதே போன்று தளபதி-65 படத்தின் டைட்டிலையும் புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி வந்தால் அது தளபதி ரசிகர்களுக்கு பெரிய புத்தாண்டு ட்ரீட்டாக இருக்கும் .