வீடியோ: "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நடனமாடி மாஸ் காட்டிய கவின்..!

நடிகர் கவின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் கவின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்றுடன் 50 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. அதைபோல் அனிருத் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் பட்டயகிளப்பி வருகிறது என்றே கூறலாம். இந்த பாடலிற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது இந்த பாடலுக்கு ஒரு விழாவில் சென்று நடனமாடியுள்ளார். அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் கவின் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by VETRIMAGAN KAVIN???????? (@kavin.fp)