மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

In Nellai, fans and theater staff lit candles to celebrate the success of the master film at the Alankar Cinemas.

நெல்லையில், அலங்கார் சினிமாஸ் திரையரங்கில் மாஸ்டர் திரைபபடத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், நெல்லையில், அலங்கார் சினிமாஸ் திரையரங்கில், ஊர்க்கு பிரச்சனைகளுக்கு  மத்தியில், மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொங்கலை முன்னிட்டு வெளிவந்து, 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைபபடத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்துள்ளனர்.