'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி.!

It has been announced that the main announcement of the movie Yaadhum Oorey Yaavarum Kelir will be released today at 6 pm

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது .

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனுடன் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node