மக்கள் செல்வன் என்று மக்களால் அழைக்கப்படுவர்.வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பவர்.முக்கியமாக இவரது நடிப்பானது எதார்த்த நடிப்பாக இருக்கும்.
தற்போது விஜய் சேதுபதி கைவசத்தில் பல படங்கள் உள்ள நிலையில்தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகி யார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் பேராண்மை மற்றும் புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
unknown nodeவிஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு கதாநாயகியாக சுருதி ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தை எதிர்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் சிந்துபாத், மாமனிதன் போன்ற படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.