நடிகர் விக்ரம் நடித்த சாமி-2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வெற்றி படமான இமைக்க நொடி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான, சாமி-2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இவர் பிரம்மாண்ட பட்ஜெட் படமான மஹாவீர் கர்ணா படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, வெற்றி படமான இமைக்க நொடி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.