கோப்ரா படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்த விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Vikram's photo released from Cobra shooting site is going viral on social media.

கோப்ரா படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான விக்ரமின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பினை தொடங்கியது .இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.அங்கிருந்து விக்ரமின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.கோப்ரா ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான விக்ரமின் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் லைக்குகளும் குவிந்து வருகிறது.விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node