நடிகை பானு தமிழ் சினிமாவில் தாமிர பரணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மேலும் அவர் மிக குறைந்த படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில் பானு கேரளாவைச்சேர்ந்த பாடகர் ரிங்கு டாமியைக்காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் `சந்திரகுமாரி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தாமிரபரணி படம் போல் ஒரு நல்ல கதை கிடைத்தால் மீண்டும் திரை படங்களில் நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.