மீண்டும் சினிமாயுலகில் நேர்ந்த சோகம்.! 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை மரணம்.!

எம் ஜி ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

எம் ஜி ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸால் ஒருபுறம் பல இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் பல பிரபலங்களின் இழப்புகளும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாயுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபல முன்னணி நடிகர்களுடன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல் நடிப்பில் வெளியான அரங்கேற்றம் படத்திலும், எம் ஜி ஆருடன் பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும், என்னை போல் ஒருவன் படத்தில் சிவாஜி கணேசனுடனும் நடித்து பிரபலமானவர்.

அண்மையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 62வயதான இவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை மலையாள சினிமாவின் பிரபல நடிகரான பிருத்விராஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனையடுத்து இவரது உடல் சென்னையில் உள்ள ஆலம்பாக்கத்தில் அவரது வீட்டில் வைத்து இறுதி சடங்கு மகன் விஷ்ணு சங்கரால் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

unknown node