என்ன பிக் பாஸ் ஆட்டையும் புலியையும் ஒரே கூண்டுல அடைக்கிறீங்க?

Goat and Tiger are in the same cage?, Today Ari and Rio are selected and imprisoned as less interesting in the Big Boss house.

இன்று பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் குறைவானவர்களாக ஆரி மற்றும் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்கும் அதிகமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதில் ஆரி மற்றும் ரியோ அதிகமாக மோதிக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தான் நிறைந்திருக்குமே தவிர புரிந்துணர்வு இருக்காது.

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள ஜெயிலில் வார வாரம் சுவாரஸ்யம் குறைவானவர்களாக இருவர் போட்டியாளர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது போல இந்த வாரம் சுவாரஸ்யம் குறைவானவர்களாக ஆரி மற்றும் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருவருக்கும் ஆகாது, என்ன நடக்கும் என ஆவல் உடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ,

unknown node