வடிவேலு சார் சொன்னது சரியா இருக்கு… அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு… ஜிபி முத்து செய்யும் அட்ராசிட்டிஸ்.!

By

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில், பல சண்டைகள் வர தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் ஜனனி தனலட்சுமியை ஸ்வாப்பிங் செய்கிறார். அதற்கு ஜனனி சொன்ன காரணம் என்னவென்றால், நேற்று ஜி.பி. முத்து கோபப்படும் போது தனலெட்சுமி பொறுமையாக இருந்திருக்கலாம் ஏனெனில் அவர் நம்மளுடைய அப்பா மாதிரி வயதில் பெரியவர் என்று கூறுகிறார்.

Bigg Boss Promo
Bigg Boss Promo [Image Source: youtube]

இதனால் சற்று மனமுடைந்த தனலட்சுமி விறு விறுவென்று வெளிய சென்று தனியாக அமர்ந்து கொண்டு நான் உள்ளே வராமலே இருந்திருக்கலாம் பிக் பாஸ் என்று கண்ணீர் விட்டு கதறுகிறார். இதனை தொடர்ந்து தற்போது 2-வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- அதே கெத்து…அதே தோரணை… 71 வயதியிலும் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் குறையவே இல்லை…!

Bigg Boss 5TH Day Promo 2
Bigg Boss 5TH Day Promo 2 [Image Source: Youtube]

இந்த ப்ரோமோவில் தனலட்சுமி ஜனனி ரீல்ஸ் என்ற வார்த்தையை ஏதற்காக சொன்னால்  என்று கேட்க, விக்ரமனும் தனலட்சுமியுடன் பேசிக்கொண்டே  ரீல்ஸ் என்ற வார்த்தையை ஜனனி சொன்னது தவறு என்று கூறுகிறார். இதனால் சற்று அங்கு வாக்குவாதம் நடக்கிறது.

Bigg Boss 5TH Day Promo 2
Bigg Boss 5TH Day Promo 2 [Image Source: Youtube]

இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ஜிபி முத்து வெளியில் உள்ள வராண்டாவில் படுத்துக்கொண்டு “மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்கிறது எவ்வளவு சுகம்” என வடிவேலு சார் சொன்னது உண்மை தான் என ஜாலியாக கூறுகிறார். அத்துடன் ப்ரோமோவும் முடிகிறது. ஜிபி முத்து செய்யும் இந்த அட்ராசிட்டிஸ் அவருடைய ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.

Dinasuvadu Media @2023