சிலம்பரசன் தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவரை ரசிகர்கள் சிம்பு என்றும் அழைப்பர்.இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.2002 இல் முதல் முறையாக தனது அப்பா இயக்கிய ‘காதல் அழிவதில்லை ‘ திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.
2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் ‘கலைமாமணி’ விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.மேலும் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
தற்போது இவர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன் ‘ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
இதனை அடுத்து சிம்பு ‘ மாநாடு ‘ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.