5 மொழிகளில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வில்லனாக நடிக்கிறாரா விக்ரம்.?

It has been rumored that Vikram will replace Vijay Sethupathi as the villain in the upcoming Pushpa film starring Allu Arjun.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதிக்கு பதிலாக விக்ரம் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இதற்கு விக்ரம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து,புஷ்பா படத்திற்காக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், அவ்வாறு வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறப்பட்டுள்ளது .

புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதும்,கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திரா காடுகளில் நடைபெற்று வருவதாகவும் ,அடுத்த ஆண்டுக்குள் புஷ்பா படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.