தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. படம் சொல்லப்பட்ட தேதிதியில் ரிலீஸ் ஆவதில்லை. ரிலீஸ் ஆகும் தேதி நெருங்கி வருகையில் ஏதாவது சிக்கல் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா திரைப்படம், சில சிக்கல்களின் காரணமாக சரியான தேதிதியில் ரிலீஸ் ஆகவில்லை. அதன்பின் ஒரு வழியாக இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுகுறித்து, இயக்குனர் வெங்கட் மோகனுக்கு, ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அயோக்யா படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர், துப்பாக்கி படம் முதல் அயோக்கியா படம் வரை கடினமாக உழைத்துள்ளீர்கள். இனி உங்களுக்கு எல்லாமே வெற்றி தான் என ட்வீட் செய்துள்ளார்.
unknown node