மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 105 ரன்கள் குவித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 7-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை அணியின் பந்துவீச்சில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ஓவர் முடிவில் 105 ரன்கள் எடுத்துள்ளது.
unknown node106 ரன்கள் என்ற இலக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹெய்லி மேத்யூஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் இருவரும் ஆட்டமிழக்க, அதன் பிறகு களமிறங்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.
unknown node18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக யாஸ்திகா பாட்டியா 41 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 23* ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக சைகா இஷாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.