GGvsDC : அனல் பறக்கும் மரிசான் கேப்பின் பௌலிங்..! திணறிய குஜராத் அணி...டெல்லிக்கு இதுவே இலக்கு..!

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் அணி 105 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் அணி 105 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 9-வது போட்டியில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 அவர்களின் ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.

unknown node

குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம் 22 ரன்களும், கிம் கார்த் 32 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி கேப்பிடல் அணியில் மரிசான் கேப் தனது அசத்திய பந்து வீச்சால் 5 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். டெல்லி கேப்பிடல் அணி வெற்றி பெற 106 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.