டெல்லி கேப்பிடல் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 9-வது போட்டியில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 அவர்களின் ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.
unknown node106 ரன்கள் என்ற இலக்கில் டெல்லி கேப்பிடல் அணியின் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5 ஓவர்கள் முடிந்த நிலையில் ஷஃபாலி வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.
unknown node7.1 ஓவர்களில் 107 ரன்களை அடித்த டெல்லி கேப்பிடல் அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிடல் அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 76 ரன்களும், மெக் லானிங் 21 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக மரிசான் கேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
unknown node